வித்யா சுப்ரமணியத்தின் சிறுகதைகள் எளிமையானவை, ஆனால் ஆழமானவை. விரிந்துபட்ட பல்வேறு தளங்களில் மனித உறவுகளையும் அவர்களது ஆழ்மனக் கொந்தளிப்புகளையும் விசாரணை செய்யும் அற்புதமான சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் அழகான ஒரு புனைவை உருவாக்கிவிடுகிறார் ஆசிரியர். உரையாடல்கள் மூலம் நகர்த்திச் செல்லப்படும் சிறுகதைகள், பல்வேறு கோணங்களில் பயணித்து, வாழ்க்கைத் தருணங்கள் குறித்த பல கேள்விகளை உருவாக்கி, யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் சட்டென்று உச்சம்கொண்டு வாசகர்களைத் திகைக்க வைக்கின்றன. சாதாரண மனிதர்களின் அசாதாரணத்துவத்தை இந்தப் புத்தகத்தில் இருக்கும் அனைத்துக் கதைகளிலும் நாம் காணலாம்.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno