உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் அமரத்துவம் பெற்ற நாவல்களுள் ஒன்று 'அன்னா கரீனினா'. கண்ணுக்குப் புலப்படாத மனித மனச் சித்திரங்களைத் தன் நாவல்களில் காட்சிப்படுத்தி, அவை குறித்த தீர்க்கமான விவாதங்களை முன்னெடுப்பது லியோ டால்ஸ்டாயின் பாணி. அன்னா கரீனினா, விரான்ஸ்கி, கரீனின், லெவின் எனச் சாகாவரம் பெற்ற பாத்திரங்களை இந்நாவலில் படைத்துக் காதல், மோகம், சோகம், சந்தேகம் எனப் பல்வேறு நிலைகளுக்கு அவற்றை ஆட்படுத்தி வாழ்க்கையை விசாரணை செய்கிறார் லியோ டால்ஸ்டாய். விரான்ஸ்கியுடனான காதல், கரீனின் மீதான வெறுப்பு, மகன் மீதான பாசம் எனப் பல்வேறு மனப் போராட்டங்களுக்கு உள்ளாகும் அன்னா கரீனினா ஒரு சுழலைப் போல நம்மை ஆட்கொள்கிறாள். இந்த நாவலில் காவியத் தன்மை கொண்ட பல கதாபாத்திரங்களைப் படைத்து நம்மைக் கரைய வைக்கிறார் டால்ஸ்டாய். லியோ டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்', தஸ்தயெவஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' போன்ற நாவல்களின் சுருக்க வடிவங்களை எழுதிய அனந்தசாய்ராம் ரங்கராஜன், எண்ணூறு பக்கங்களுக்கும் மேற்பட்ட இந்த நாவலையும் இருநூறு பக்கங்களுக்குள் சுருக்கி எழுதி ஒரு சாதனையை ஏற்படுத்தி இருக்கிறார்.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno







