"சகலாவல்லியே! நீ சாய்ந்திருக்கும் சர்ப்பாசனம் சந்திரசேகர பூபதிக்குச் சந்தனக் கட்டை விற்றதிலே கிடைத்த இலாபத்தால் வாங்கியதுதான். மாலையில் நீ மினுக்கிக்கொண்டு நிற்கிறாயே, பளிங்கு அறையிலே, நிலக்கண்ணாடி, அது, எது தெரியுமா? ஏவலப்பனுக்கு என்னாலே பெருங்கஷடம் வந்தது என்று எவனெவனோ பேசினானே, அந்தச் சமயத்தில், அவனுடைய சஞ்சலத்தைப் போக்க, நான் தந்திரமாக என் மதியை உபயோதித்ததால் வந்தது. அவன், இதனை 60 பொன் கொடுத்து வாங்கினான் என்று நான் கேள்விப்பட்டதாகச் சொன்னேன், அவன் 600 பொன் கொடுத்துப் பெற்ற பொருள் அது என்பது எனக்குத் தெரியும்! அழுதுகொண்டே கொடுத்தான், அதன் முன்புதான் நீ சிரித்துக்கொண்டே நிற்கிறாய், சிங்காரியாக. உன் உடை, உல்லாசம், மாளிகை, தோட்டம், வண்டி வாகனம், வேலையாள், இவற்றை வேதாந்தம் தேடித் தரவில்லை, மாயாஜாலப் பொருள்களல்ல! மக்கள் மன்றத்திலே நீயும் உன் சகாக்களும் பேசினீர்களாமே, கொள்ளை இலாபம் அடிக்கும் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று; அந்தக் கொள்ளை இலாபம் கொடுத்த பொருட்குவியலிலே நீ இருக்கிறாய்! ஏழைகளின் இரத்தத்தை நாங்கள் குடிக்கிறோம் என்று ஏசினீர்களாமே, கூட்டத்திலே.அந்த இரத்தத்தை, நான் கெட்டவாடை போக்கித் தங்கக் கோப்பையிலே ஊற்றித் தந்தேன் உனக்கு, அதை நீயும் பருகினாய். உனக்காகத்தான் நான் அந்த வேலையையும் செய்தேன். உன் அழகுக்கேற்ற அந்தஸ்து தேடிக்கொடுத்தேன். கண்டவர் மெச்சும் காட்சிப் பொருளாக்கினேன். பரிபூரண திருப்தியுடன் பாலும் பழமும் சாப்பிட்டுக் கொண்டு பரிமளவாடை கொண்ட பஞ்சணையில் நீ படுத்துத் தூங்கின போதெல்லாம், நான் பாழும் கணக்கு கணக்கு என்று அதிலே மூழ்க, இவ்வளவு போக போக்கியங்களை உனக்கு அளித்தேன்.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno







