ஆரஞ்சுப்பழம், அம்பேத்கரியம், ஆன்மிகம் - இம்மூன்றுக்கும் புகழ் பெற்ற நகரம் நாக்பூர். அதில் ஆன்மிகத்தைச் சேர்த்தவர் தாஜுத்தீன் பாபா. தன் வாழ்நாள் முழுவதும் மானிட நலனுக்காக அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்த மாபெரும் சூஃபி ஞானி அவர். சமுதாயத்தால் மதிக்கப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள், பெண்கள், குழந்தைகள், மிருகங்கள், மரம் மட்டை என அவரது கருணை அனைவரையும், அனைத்தையும் சென்றடைந்தது. இறந்த பிறகும் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அற்புதங்கள் சந்தேகம் கொண்ட மானிட அறிவின் நாக்குகளை வெட்டுபவையாகும். தான் வாழ்ந்த மனநலக்காப்பகத்தை மக்கள் குறை தீர்க்கும் மன்றமாகவும், நாக்பூரை தாஜ்பூராகவும் மாற்றியவர். நாக்பூரின் ஆரஞ்சுப் பழத்தைப்போல தித்திக்கும் நடையில் நாகூர் ரூமி அவரது கதையைச் சொல்கிறார். படித்துப் பாருங்கள்.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno