மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவபெருமானே தன் கைப்பட எழுதி, `இது வாதவூரான் சொல்ல திருச்சிற்றம்பலம் உடையான் எழுதிய கைச் சாத்து' என்று கையொப்பமிட்ட பெருமை உடையது 'திருவாசகம்'. திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்பதற்கேற்ப, இப்புத்தகத்தின் ஆசிரியர் திரு.சுசர்ல வெங்கடரமணி அவர்களும் திருவாசகத்தின் வரிகளில் உருகி, அதில் தோய்ந்து, ஆய்ந்து அதில் பொதிந்துள்ள கருத்துக்களை 12 அத்தியாயங்களில் பற்பல புராண, இதிகாச, இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி, அமுதமாக வாசகர்களுக்கு படைத்திருக்கிறார். இது நிச்சயமாக தமிழ் ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், சைவ நெறியாளர்களுக்கும் சிறப்பான விருந்தாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.