எது நல்ல உணவு? உணவின் கூறுகள் யாவை? நாம் உண்ணும் உணவு, எவ்வகையில் உடலின் அடிப்படை இயக்கங்களில் மாற்றங்களைத் தோற்றுவிக்கிறது? குப்பை உணவுகள் எவ்விதம் நம் வாழ்வை நரகமாக்குகின்றன? வாழ்வியல் நோய்களை எவ்விதம் அணுகுவது? உணவு முறை மாற்றத்தின் மூலம் நோய்களை எப்படி எதிர்கொள்வது? இவை போன்ற கேள்விகளுக்கு ஊட்டச்சத்தியல் ஆலோசகர் ஒருவரின் பார்வையில் இந்நூல் விடையளிக்கிறது. உடல்நலத்தில் நாட்டம் கொண்ட ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது. யோகாம்பாள் திருநாவுக்கரசு அடிப்படையில் ஒரு பொறியாளர். ஆனால், உணவு & ஊட்டச்சத்தியல் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால், அத்துறையில் பட்டம் பெற்று, ஊட்டச்சத்தியல் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். உடற்பருமன் மற்றும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, பிரத்தியேகமான உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் Paleobay என்ற நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno