சங்க இலக்கியத்தில் நான் என்னைத் தொலைத்து அதனோடு இரண்டறக் கலந்து, சங்க காலத்திற்கும் சம காலத்திற்குமிடையே கால ஊஞ்சலில் அமர்ந்து முன்னும் பின்னும் ஆடியவாறு, பார்த்துப் பார்த்து எழுதிக் கோர்த்த கதைகள் இவை. இப்புத்தகத்தில் உள்ள இருபது கதைகளும் ஒன்றைப் போல் ஒன்றில்லாமல், வெவ்வேறு களங்களில் எழுதப்பட்டவையாகும். என் வாழ்வில் மிக முக்கியமான புத்தகமாக இதைக் கருதுகிறேன். இன்றைய இளம் தலைமுறையினர் சங்க இலக்கியத்தின் சுவையை அறிந்திட வேண்டுமென்பதே இந்தப் புத்தகத்தின் நோக்கமாகும். - வித்யா சுப்ரமணியம் ஒரு படைப்பின் உன்னதம், அதைப் படைப்பவர் அதில் தன்னைத் தொலைப்பதில் அடங்கியிருக்கிறது. சுசீந்திரத்தின் சிற்பங்களைப்போல, மல்லையின் பகீரதன் தவம் போல, அந்தப் பட்டியலில் வித்யாவின் இந்தத் தொகுப்பையும் சேர்க்க வேண்டும். கதைக்கான களங்கள், கதாபாத்திரங்கள் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்ததில் கவனமும் பொறுப்பும் தெரிகிறது. இந்தக் கதைகளை அவர் எழுதியபோது ஒரு பெண்ணின் அழகில், நயத்தில், கம்பீரத்தில் தன்னைத் தொலைத்த ஆண்போல அவர் சங்க இலக்கியத்தின் வசீகரத்தில் தன்னை இழந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. - திரு. மாலன்
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno







