என்னைப் பொறுத்தமட்டில் ஒரு சிறுகதை என்பது சிரிக்கவும் சிந்திக்கவும் மட்டுமல்லாது அடுத்தவர் அல்லது உங்கள் வாழ்வில் இது போன்று நடந்த சம்பவத்தை நினைவுபடுத்த வேண்டும். நான் இதில் எழுதியுள்ள சிறுகதைகள் உங்கள் பள்ளிப் பருவத்திலிருந்து இந்த நொடி வரை நடந்த மற்றும் கேள்வியுற்ற சம்பவங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்தும் என நம்புகிறேன். என்னுடைய சிறுகதைகளில் நகைச்சுவை, மனித நேயம், உடல் வலி, மன வலி, உழைப்பு, சந்தேகம், ஆன்மிகம் அப்படின்னு உங்க இதயத்தை வருடும் சில சம்பவங்களை நீங்க ரசிச்சு படிக்கும்படியா சொல்ல முயற்சித்துள்ளேன். 'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ' என்றார் பாரதி. அது போல், இதில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் சிறு தீப்பொறியாய் உங்களிடமிருந்து மற்றவருக்கும் பரவும் என நம்பிக்கை கொள்கிறேன். மிக்க நன்றி.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno