தாமஸ் ஆல்வா எடிசன் - உலகை மாற்றி அமைத்த மாபெரும் அறிவியல் அறிஞர். இவரது கண்டுபிடிப்புகள் ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரத்துக்கும் மேல். மின்சாரம் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்த்தால் தெரியும் எடிசனின் அருமையும் பெருமையும். எடிசனின் வாழ்க்கை வரலாற்றை விரிவும் ஆழமுமாகச் சொல்லும் இது போன்ற இன்னொரு நூல் தமிழில் வந்ததில்லை. எடிசனின் கண்டுபிடிப்புகளையும் அதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் விவரிக்கும் இந்தப் புத்தகம், கூடவே எடிசனின் சமகாலத்து அறிவியல் அறிஞர்கள் பற்றிய துல்லியமான சித்திரத்தையும் தருகிறது. அறிவியல் அறிஞராக வென்ற எடிசனின் குடும்ப வாழ்க்கைத் தோல்விகளையும், கார்ப்பரேட் யுத்தத்தின் வெற்றிக்காக நெறிகளைக் கைவிவிட்டுட்டு எடிசன் செய்த பகீர் செயல்களையும் விமர்சன நோக்கில் சுட்டிக் காட்டத் தவறவில்லை இந்த நூலின் ஆசிரியர் எஸ்.எல்.வி. மூர்த்தி ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு தொழில்முனைவோரும் தவற விடக் கூடாத நூல் இது.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno