"திராவிட அரசியல் வரலாற்றில் அதிமுகவின் பங்களிப்பு முக்கியமானது. 'அதிமுகவின் செயல்பாடுகள் திராவிடக் கட்சிகளின் மையத்திலிருந்து விலகுவது போல் தோன்றினாலும், கொள்கை ரீதியாக அது தன்னை திராவிடக் கட்சிகளில் ஒன்றாகவே அறிவித்துக் கொண்டுள்ளது. இந்த வேறுபாட்டினால் அதிமுகவின் அரசியல் ஒரே சமயத்தில் சுவாரஸ்யமானதாகவும் சிக்கல் மிகுந்ததாகவும் மாறுகிறது. எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் திராவிடக் கட்சி அரசியலை முற்றிலுமாகக் கைவிடாமல். அதே சமயம் தங்களது தனித்துவமான அரசியலையும் தொடர்ந்து செய்தார்கள். இதன்மூலம் கருணாநிதியின் அரசியலை சாதுர்யமாக எதிர்கொண்டார்கள். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என்ற இரு தலைவர்கள் இல்லாமல் இருந்திருந்தால், திராவிடக் கட்சிகளின் அரசியல் ஒற்றைப் படைத் தன்மை கொண்டதாகக் கூட மாறி இருக்கும் வாய்ப்பு உண்டு. கருணாநிதியின் தீவிர அரசியல் காலம் தொடங்கி, எம்ஜிஆரின் எழுச்சி, அதிமுகவின் உதயம், ஜெயலலிதாவின் அரசியல் என அனைத்தையும் இந்த இரண்டாம் பாகத்தில் பதிவு செய்திருக்கிறார் ஜோதிஜி. எவ்விதச் சார்பும் இன்றி நேரடியாகப் பேசும் மொழியில் இந்த நூல் எழுதப்பட்டிருப்பது சிறப்பு."
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno