பள்ளிக்கூடப் பாடங்களைப் படிப்பதும் ஒரு கலையே. எப்படிப் படிப்பது என்று தெரிந்துகொண்டுவிட்டால், எத்தனை கடினமான பாடங்களையும் கூட படித்துவிடலாம். பள்ளிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் யாரும், அதைப் படிப்பது எப்படி என்று விளக்கமாகச் சொல்லித் தருவதில்லை. அந்தக் குறையைப் போக்குகிறது இந்தப் புத்தகம். தேர்வுக்குத் தயாராவது எப்படி என்கிற முதன்மை நோக்கத்தோடு இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், படிப்பது வெறும் தேர்வுக்காக மட்டுமல்ல என்பதையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது. படிப்பதை அறிவியல் கண்ணோட்டத்தோடு அணுகும் இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு செயல்முறைப் படிவம் தரப்பட்டுள்ளது. மாணவர்களின் படிப்புக்கு இந்தப் படிவங்கள் நிச்சயம் உறுதுணை செய்யும். என்னால் காலையில் படிக்க முடியவில்லை, என்னால் இரவில் படிக்க முடியவில்லை, என்னால் படித்ததை நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை, படித்ததைத் தேர்வில் என்னால் எழுத முடியவில்லை என்பன போன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் எளிய தீர்வைச் சொல்கிறது இந்த நூல். முனைவர் ப.சரவணன், கல்வித் துறையில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருபவர். இலக்கிய ஆர்வலர். பிரபலமான எழுத்தாளர். மாணவர்களுக்கென்றே இந்தப் புத்தகத்தை பிரத்தியேகமாக உருவாக்கி உள்ளார்.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno