2021-22 ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக இந்நூலுக்காக அ.ப.காரல் மார்க்ஸ் சித்தார்த்தர் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளார் . 'அம்பேத்கரும் அவரது தம்மமும்' என்ற நூல் டிசம்பர் 2018 அன்று வெளிவந்தது. இந்நூலின் ஆசிரியர் திரு.வசுமித்ர. ஆசிரியரின் நூலுக்கான மறுப்பே தங்கள் கையில் தற்போது இருக்கும் 'காவியில் சிதையும் சிவப்பு' என்று கருதினால் அது தவறு. ஆசிரியரின் 'அம்பேத்கரும் அவரது தம்மமும்' நூலுக்கான மறுப்பு அம்பேத்கரின் 'புத்தரும் அவர் தம்மமும்' நூலே ஆகும். வாசிப்பில் பிழை இருந்தால் பக்கங்களில் உள்ள எழுத்து என்ன செய்ய முடியும்! வாசிப்பவர் தான் பிழையின்றி மறுவாசிப்பு செய்ய வேண்டும். அப்படியெனில் இந்நூலின் நோக்கம்தான் என்ன என்று கேட்கலாம். அம்பேத்கரை வாசிக்கும் ஆசிரியர் தெரிந்தே தான் பிழைகளாக நமக்கு வாசித்து காண்பிக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டு காண்பிக்கவே இந்நூல் எழுதப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாய் வீற்றிருக்கும் அண்ணல் அம்பேத்கரை தர்க்க ரீதியாக சிதைக்க முற்படும் போது, அதில் பங்கெடுக்கும் கேள்விகளையும் விமர்சனங்களையும் கண்டு உணர்ச்சிவசப்படாமல், அதற்கான பதில்களையும் சரியான புரிதல்களையும் தேடி நகர்ந்ததின் இறுதி வடிவமே இந்நூல். எனவே, புத்தரையும் பௌத்தத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள இந்நூல் வழிவகுக்கும் என நம்புகிறேன்.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno







