இந்தியப் பண்பாட்டில் தோன்றிய மதங்கள் அனைத்துமே கலைக்கு முக்கியத்துவம் அளித்தன. பக்திக்காகவும் தங்கள் பெருமையைப் பறைசாற்றுவதற்காகவும் சிற்பக் கலையும் ஓவியக் கலையும் இன்ன பிற கலைகளும் அரசர்களால் பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டன. இன்றளவும் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கோவில்களும் சிலைகளும் கண்கவர் ஓவியங்களும் மதங்கள் வளர்த்த கலைகளுக்குச் சான்றாக நம் கண் முன் நிற்கின்றன. ஹிந்து மதம், பௌத்தம், சமணம் மற்றும் இன்ன பிற இந்திய மதங்களின் கொடையாக விளங்கும் கோவில்களையும், அவற்றில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளையும், கற்பனைக்கெட்டாத ஓவியங்களையும், அவற்றின் நுணுக்கங்களையும் வரலாற்றையும் ஆழமாக விவரிக்கிறது இந்தப் புத்தகம். சேர, சோழ, பாண்டியர்கள் மற்றும் பிற அரசர்களின் கலைப் பங்களிப்பையும் விளக்குகிறது. இந்த நூலின் ஆசிரியர் அரவக்கோன் ஓர் ஓவியர். ஓவியத்திலும் சிற்பக் கலையிலும் ஆர்வம் உள்ளவர். இவை தொடர்பாக முக்கியமான புத்தகங்களை எழுதியவர்.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno