(For description in English, go to the bottom) மற்ற ராமாயண நூல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்த நூலின் தனித்தன்மை என்ன? 1. முதலில் ஒலி வடிவில், நேரே இளம் பிள்ளைகளுக்குக் கதை சொல்வது போல வந்த கதைத் தொடரின் புத்தக வடிவம் இந்த நூல். இது, 9 முதல் 14-15 வயது சிறார்கள் படிக்க ஏற்றது. பெரியவர்களும் படித்து ரசிக்க ஏதுவானது. 2. இது முற்றிலும் வால்மிகி ராமாயணத்தை அடிப்படையாய்க் கொண்டது. வேறு ராமாயணக் கதைகளின் கலப்பு இல்லாதது. உத்தர காண்டமும் உள்ளடக்கியது. (பல ராமாயணக் கதைகளில் உத்தரகாண்டம் விடப்பட்டுவிடுவதைக் காணமுடிகிறது). 3. இளம் பிள்ளைகளோடு உரையாடும் விதத்திலான ஒரு அமைப்பு. 4. நல்ல, எளிய, திருத்தமான தமிழ். (பேச்சுத் தமிழ் அல்ல). 5. ராமாயணக் காட்சிகள் ஆங்காங்கே படங்களாகவும் சேர்க்கப்பட்டுள்ளன. 6. பெற்றோர்களும் பெரியவர்களும் கூட, தாமே படிக்கவும், குழந்தைகளுக்குப் படித்துக் காட்டவும் ஏற்ற விதத்தில் ஓரளவு விரிவாகவே சொல்லப்படும் கதை. (தமிழ் படிக்கத் தெரியாத தமிழ்க் குழந்தைகளுக்கு இது மிகவும் பயன்படும் ) 7. கதையில் இக்காலச் சிறார்களுக்குப் புரியாத சில விஷயங்கள் வரும்போது, அவற்றிற்கான கூடுதல் விளக்கங்கள் உண்டு. 8. இக் கதையைப் படிக்கும் சிறார்களின் நினைவாற்றலை சோதிக்கும் விதத்தில் ஆங்காங்கே சில கேள்விகள் உண்டு. 9. குழந்தைகளை பெற்றோர்களுடன் பேசி விவாதிக்க உற்சாகப் படுத்தும் விதத்தில் சில தூண்டல்கள் உண்டு. 10. ஏற்கனவே இக் கதையை ஒலி வடிவில் கேட்ட குழந்தைகள், சற்று வளர்ந்ததும் தாமே முன்பு கேட்டதைப் படித்துப் பார்க்க உதவும் வகையில் இந்த நூல் வடிவம். 11. மூன்று பாகங்களாய் வந்திருக்கும் நூல். முதல் பாகத்தில் பால காண்டமும், அயோத்தியா காண்டமும், இரண்டாம் பாகத்தில
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno







