திருவாங்கூர் சமஸ்தானத்தில் தீண்டாமைக்கு எதிராக நடந்த வைக்கம் போராட்டம் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய நிகழ்வாகும். பட்டியலினத்தவர்களின் கோவில் நுழைவைச் சாத்தியமாக்கிய இப்போராட்டத்தைக் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன. வைக்கம் போராட்டத்தில் பல முக்கியமான தலைவர்கள் பங்கெடுத்தனர். ஆனாலும் இப்போராட்டத்தில் பங்கெடுத்த தலைவர்கள் குறித்து விவாதம் நடந்தவண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தப் போராட்டத்தைப் பிராமணர்களுக்கு எதிராகச் சித்திரிப்பதில் சில அரசியல் சக்திகளுக்கு உள்நோக்கமும் ஆதாயமும் இருப்பது கண்கூடு. இந்தக் கேள்விகளுக்கு ஆய்வுநோக்கில் ஆதாரபூர்வமாகப் பதில் சொல்கிறது இந்தப் புத்தகம். * வைக்கம் போராட்டத்தில் பிராமணர்களின் பங்களிப்பு என்ன? * இந்தப் போராட்டத்திற்குப் பிராமணர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இருந்தனவா? * இந்தப் போராட்ட வெற்றியில் பிராமணர்களின் பங்கு என்ன? இந்தக் கேள்விகள் குறித்து ஆசிரியர் மா.வெங்கடேசன் தெளிவாக இப்புத்தகத்தில் விளக்கியுள்ளார். மறைக்கப்பட்ட பலரது முகங்களை, தியாகங்களை ஆதாரத்தோடு பதிவு செய்கிறது இந்தப் புத்தகம்.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno







