இன்பக்கடல், சத்திமுத்தப் புலவர் ஆகிய இரு சிறு நாடகங்கள் என்னால் முன்னரே எழுதப்பட்டவை அவை குயிலில் வெளிவந்தவை. எவற்றில் முன்னது என் கற்பனை; அடுத்தது சத்திமுத்தப் புலவர் வறலாற்றின் தழுவல். பட்டு யார்? அரச அரசப்பன். பட்டு ஓ வாருங்கள்; உட்காருங்கள் அத்தான். அரச என்ன பட்டு, உன் குரலில் இத்தனை தளர்ச்சி? பட்டு ஒன்றுமில்லை... நமக்குள் ஏற்பட்டுள்ள தொடர்பு ஊர் அறிந்ததாகிவிட்டது. நம் திருமணம் விரைவில் நடந்துவிட வேண்டுமென என்று பெற்றோர் கவலை அடைந்திருக்கிறார்கள். அரச நான்தான் சொன்னேனே, என் காதல் பித்துக்காக உன்னையும், திரண்ட சொத்துக்காக அந்தத் தங்கத்தையும் (நான்) மணந்து கொள்ள வேண்டுமென்று! இதை இனிய முறையில் எடுத்துச் சொல்ல வேண்டாமா, நீ உன் பெற்றோருக்கு? பட்டு ஒப்புவார்களா... உம்...ஒப்புவார்கள்... ஒப்பித்தான் தீர வேண்டும் அவர்கள். எதுவும் பேசிக் கொள்ளாமல் என்னைப் பறிகொடுத்தேன் உங்கட்கு! இட்டோது இதுவும் சொல்வீர்கள். எதுவும் சொல்வீர்கள். நல்லது அத்தான்! ஆமாம். முதலில் எனக்கும் உங்கட்கும் திருமணமா? அல்லது தங்கத்திற்கும் தங்கட்குமா? அரச தங்கத்தைத்தான் முதலில் மணந்து கொள்ள வேண்டும். பட்டு அத்தான், கேளுங்கள். நான் பட்டு. முதலில் பட்டணிந்து தானே. பிறகு தங்கத்தையணிவார்கள்? அரச இல்லையே, தங்கத்தைப் பெற்றால்தானே பட்டைப் பெற முடியும்? இதில் இன்னொன்னு. என்னென்று கேள்.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno







