விடிந்தால் தீபாவளி- இரவு முழுதும் ஊரெங்கும் வாண வேடிக்கைகள். தெருவுக்குத் தெரு- வீட்டுக்கு வீடு - போட்டி போட்டுக் கொண்டு வாணம் கொழுத்தி மகிழ்ந்தனர். சந்தர்ப்ப வாதிகளின் பச்சோந்தி உள் ளம் போல மத்தாப்புகள் பல நிறம் காட்டின. ஒரு சில அரசியல் தலைவர்களின் போராட்ட அறிவிப்புகள் போல அவுட் வாணங்கள் ஆகாயத்தில் கிளம்பின. ஆனாவுக்கு ஆனா கானாவுக்குக் கானா என்ற விதத்திலே எழுதப்படும் அர்த்தமற்ற அடுக்குச் சொல் வசனம் போல சீன வெடிகள் - ஊசிப்பட்டாசுகள் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டன. புதிய ஆடைகளைக் கண்டு பூரிப்புத் தவழ ஓடி ஆடினர் சிறுவர், சிறுமியர். தலைத் தீபா வளிக்கு வந்திருக்கும் தம்பதிகள் உபசாரங்களுக்கும் - கிண்டல் உபத்திரவங்களுக்கு மிடையே - உல்லாசப் பொழுது போக்கினர். ஊரே மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் அந்த இரவில், நாராயணி மட்டும் சோகத்தின் நிழலாக தன் வீட்டில் அமர்ந்திருந்தாள். தீபாவளி தமிழரின் திருநாளல்ல; தமிழரின் இறந்த நாளைக் கொண்டாடும் ஆரியப் பண்டிகை. கருத்துக்கு ஒவ்வாத கதை அளப்பு. அதை நமது பண்டிகையாகக் கொண்டாடிக் குதூகலிப்பது குருட்டுக் கொள்கை. ஆகவே, அதில் கலந்து கொள்ளக் கூடாது என்பதல்ல நாராயணியின் எண்ணம்! அவள் அவ்வளவு அறிவு வளர்ச்சி பெற்றவளுமல்ல. போட்டி போட்டுக் கொண்டு புராணக் குட்டை யிலே மூழ்கி எழும் பெண்மணிகளின் வரிசையிலே அவளும் ஒருத்தி தான். ஆயினும் அவள் தீபாவளி கொண் டாடவில்லை. காதைத் தொடமுயலும் கண்களும், காண்பவரைக் கவரும் விதத்திலே அமைந்த உடற்கட்டும் பெற்ற நாராயணி தன் வீட்டு முகப்பிலே அமர்ந்து, தீபாவளி விழாவில் கலந்து மகிழும் ஊராரைப் பார்த்துப் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno







