இந்துக்களின் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையின் மன்னார் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ளது சேதுபந்தனம் என்று அழைக்கப்படும் ராமர் பாலம் இதன் வழியாக கால்வாய் அமைத்து கப்பல் போக்குவரத்து நடத்த மத்திய அரசு திட்டமிட்டது இதன் மூலம் தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடியை ஒட்டிய பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உள்ளது ஆனாலும் ராமர் பாலம் இந்த கால்வாய்க்காக இடிக்கப்படும் என்ற சொல் மத உணர்வுகளையும் மத நம்பிக்கைகளையும் வீறு கொண்டு எழ வைத்து விட்டது இதன் விளைவாகவே இந்த கால்வாய் அமைக்க எதிர்ப்பு ஏற்பட்டது மரபுகளை மட்டுமே ஆண்டாண்டு காலமாக மதித்து வரும் தமிழகத்திலும் சரி இந்தியா முழுவதும் சரி மக்கள் இந்த ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தனர் இதன் விளைவாக இந்த திட்டம் வழக்குகளை சந்தித்து கிடப்பில் போடப்பட்டுள்ளது இருந்தாலும் மாற்றுப்பாதையில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை அதற்கான வழிகளும் உள்ளன இந்த புத்தகத்தில் ராமர் பாலம் என்று அழைக்கப்படும் சேதுபந்தனம் எப்படி வழிவழியாக இலக்கியங்களிலும் புராணத்திலும் ராமரால் கட்டப்பட்டது என்பதை விளக்குகிறது இதற்கான விஞ்ஞானபூர்வ ஆதாரங்களும் இதனை ஆராய்ந்த அறிஞர்களால் தரப்பட்டுள்ளன
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno