[மதுரை மன்னன் திருமலையின் மாய மரணம் பற்றிய குறிப்புகளைக் கொண்டு சித்தரிக்கப்படும் ஓவியம் இது. இட்டுக் கட்டியதோ என்று ஐயப்படுவோருக்கு, எம். எஸ். சுப்ரமணிய ஐயர் தீட்டிய கன்னியர் வீரம் என்ற சிறு நூலில், பட்டர் புதல்வி என்னும் சிறு கதையைப்பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்] [சுந்திரவல்லி] மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரதம பட்டாச்சாரியின் திருமகள் நான். பெயர் சுந்திரவல்லி. இளமங்கை-எழில்மிக்கவள்-பூங்கொடி-ஊர் புகழ்கிறது என்னை. இதோ என் எதிரில் இருப்பது விஷக்கோப்பை. தங்கக் கோப்பை, மன்னன் முன்பு தந்த பரிசு இது-அப்பாவுக்கு! எனக்கும் பரிசு தந்திருக்கிறான், விஷம்! "குழந்தை விக்ரஹம் போலிருக்கிறது! பாப்பா!! வாம்மா, வா! ஏன் பயம்? ஓடிவா, ஓடிவா! இதோ பார், உனக்குத்தான் மல்லிகை-வா! நான் சிறுமி, பட்டாச்சாரி மகள் - அவர்! - நாடாளும் மன்னன். அவருடைய அன்பு மொழி எனக்குத் தேனாக இனித்தது. அப்பா பூரித்துப் போவார். என்னைப் பிடித்திழுத்துக்கொண்டு போய் மன்னர் முன் நிறுத்துவார். அவர் என் முகவாய்க்கட்டையைப் பிடித்துத் தூக்குவார், கன்னத்தைக் கிள்ளுவார். துவள்வேன், தூக்கி உட்கார வைத்துக்கொள்வார் மடியிலே! ஊரார் சுந்திரவல்லி மஹா அதிர்ஷ்டக்காரி! மகாராஜாவுக்கு உயிர்-என்பார்கள். பலநாள், எனக்குப் பழமும், பட்சணமும், மல்லியும், முல்லையும் கொண்டு வந்து தருவார். ராஜ காரியங்கள் ஏராளம் என்றாலும், என்னைப் பார்க்கவும், விளையாடவும், எப்படியோ அவருக்கு நேரம் கிடைத்தது சிறுமிதானே நான்-எனக்கு ஒரே பெருமை! என்னைப் போன்ற சிறுமிகளைப் பார்க்கும்போது, பெருமையாகச் சொல்வேன், உங்கள் ஆத்துக்கு ராஜா வர்ராரோ எங்காத்துக்கு ராஜா வரார்-என்னோடு வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருப்பார்
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno







