வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளை நாம் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இது 'விதியின் பயன்' என்று எண்ணி, மனதைச் சமாதானப் படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற பொதுக் கருத்துதான் நிலவுகிறது. ஆனால் பல அறிஞர்கள் நாம் நம் விதியை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று பலகாலமாகவே வலியுறுத்தி வந்துள்ளனர். அந்த சக்தி, மனம் என்னும் மஹா சக்திதான் என்றும், மெய்ஞான வெற்றிக்கு மட்டுமின்றி உலகியலுக்கும், தனிமனித வெற்றிக்கும் அது ஒன்றே தான் காரணம் என்றும் அடையாளம் கண்டுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. இந்த மனம் என்னும் சக்தி ஒன்றேதான் மெய்ஞான வெற்றியானாலும், உலகியல் வெற்றியானாலும் அவரவர்களின் இலக்குகளை அடைய, தன் விதியை படைக்க உதவுகிறது என்பதை ஸ்வாமி விவேகானந்தர் அவர்கள், "உங்கள் விதியைப் படைத்தது நீங்களே என்பதை அறியுங்கள். உங்களுக்கு வேண்டிய முழு பலமும் முழுத் துணையும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன. ஆதலால் வருங்கால வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிய அறிவுரையின் வாயிலாக அறிவித்துக் கொள்கிறோம். ஆகவே எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டுமென்றால் இந்த மனச்சக்தியை இயக்க முறையான, சுலபமான வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
Dieser Download kann aus rechtlichen Gründen nur mit Rechnungsadresse in A, B, CY, CZ, D, DK, EW, E, FIN, F, GR, H, IRL, I, LT, L, LR, M, NL, PL, P, R, S, SLO, SK ausgeliefert werden.